வவுனியா வடக்கு நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 7.30 மணியளவில் பாடசாலையின் வகுப்பறை முன்பாகவே குறித்த மிதிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறிதொரு வகுப்பறை திருத்த வேலைக்காக மண்ணை அகழ்ந்த போதே அப்பகுதியில் மிதிவெடி போன்ற ஒரு பொருள் இருப்பதனை அவதானித்த பாடசாலை அதிபர் உடனடியாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பாடசாலைக்கு சென்ற பொலிஸார் மிதிவெடியை பார்வையிட்டு, மாணவர்கள் அப்பகுதிக்கு பிரவேசிக்காத வண்ணம் பொலிஸ் பாதுகாப்பிட்டதோடு, விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மிதிவெடியினை செயலிழக்க வைக்கவுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.