மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நூற்றாண்டு நினைவு முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இராமநாதன் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று திங்கட்கிழமை கல்லூரி அதிபர் திருமதி கமலாராணி கிருஷ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, வடமாகாண அஞ்சல்மா அதிபர் என்.இரட்ணசிங்கம் நூற்றாண்டு நினைவு முத்திரையினை வெளியிட்டு வைக்க விஞ்ஞான தகவல் தொழில்நுட்பத்துறை சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.