நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று சனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வேட்புமனுத்தாக்கல் அடுத்தமாதம் 6ம் திகதி ஆரம்பம் 15ம்திகதி முடிவடையும். புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் 1ம் திகதி கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவிருப்பதனால் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.