நவீபிள்ளையை திருமணம் முடிக்க தயார்; மேர்வின் விருப்பம்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நவநீதம்பிள்ளைக்கு நாட்டை சுற்றிக்காட்டுவதற்கு தான் தயாரென்றும் இலங்கையின் வரலாற்றை கற்பித்துக்கொடுத்து அவரை திருமணம் முடித்துக்கொள்வதற்கு தயாரென்றும் பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மருதானையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,இராவணன் முதல் விஜயகுமாரவிற்கு இடம்கொடுத்து குவேனியை திருமணம் முடித்துகொடுத்தவர்கள் நாம், நவனீதம்பிள்ளை விரும்பினால் அவரை நான் திருமணம் முடித்துகொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்றார்.