நள்ளிரவில் மாணவியர் விடுதிக்குள் புகுந்த மாணவர்கள் பல்கலையிலிருந்து இடைநிறுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதிக்குள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் நான்கு பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த விடுதி பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக தெரிவித்து நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுக்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

எனினும் மாணவியர் விடுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும், வெளியார் யாரும் அத்துமீறி பிரவேசிக்க முடியாத வகையில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக நிர்வாகமும் வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக மாணவியர் விடுதிக்குள் நுழைந்திருந்த நிலையில் நிர்வாகத்திடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.

தற்போது அவர்கள் கற்றல் நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் மாணவர்களை தனது அறைக்கு வரவழைத்த மாணவிக்கும் விடுதி வசதி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.