பொதுநலவாய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ள நிலையில சர்வதேச நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்த போராட்டத்தில் 150 ற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
“இராணுவத்திடம் கையளித்த எங்கள் பிள்ளைகள் எங்கே” “அபிவிருத்தி வேண்டாம் எங்கள் பிள்ளைகள் வேண்டும்” போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்தி
வரும் வெள்ளிக்கிழமை நல்லூரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்