நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் வேள்வி நடைபெற்றது

aadu-sheepவலி. வடக்கில் உள்ள கீரிமலை கருகம்பனை கவுணாவத்தை நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை வேள்வி நடைபெற்றுள்ளது.

இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த வேள்வியை தடுக்கக்கோரி தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியினால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார வைத்திய அதிகாரியினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டதயைடுத்தே இவ்வேள்வி இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, சுமார் 50 இற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் வெட்டப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

நரசிம்மர் வைரவர் ஆலயத்தில் வேள்வி நடைபெறும்: நிர்வாகம்

Recommended For You

About the Author: Editor