நயினாதீவு பிரதேசத்துக்கு மீண்டும் சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது காலநிலை வேறுபாட்டால் மின்பிறப்பாக்கிகளுக்குரிய டீசலை கொண்டு செல்வதில் நெருக்கடி நிலவுகிறது. இதனால் மின் விநியோகத்தில் தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் மட்டும் இந்த மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றது. பகலில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுகிறது.
கடல் மார்க்கமாக டீசல் கொண்டு செல்லப்பட்டதும் வழமைபோல் 24 மணிநேரம் மின் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டது. மின் விநியோகம் இந்த வாரத்தில் சீராகிவிடும் என்றும் கூறப்பட்டது.