நக்கீரன் விளையாட்டுக்கழக அணி சம்பியன்

1(5950)இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப் பிரிவு ஆண்கள் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் வடமராட்சி நக்கீரன் விளையாட்டக்கழகம் வெற்றிபெற்றது,

நெல்லியடி கொலின்ஸ் விளையாட்டக்கழக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற மேற்படி போட்டியில் வலிகாமம் கால்பந்தாட்ட லீக் அணியை எதிர்த்து வடமராட்சி நக்கீரன் விளையாட்டுக் கழகம் மோதியது.

முதற்பாதியாட்டத்தில் 1:0 என்ற கோல்கள் அடிப்படையில் நக்கீரன் அணி முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இரண்டாவது பாதியாட்டத்தில் மேலும் மூன்று கோல்களை நக்கீரன் அணி போட்டது.

இறுதியில் நக்கீரன் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது, இந்தச் சுற்றுப்போட்டி தேசிய ரீதியில் இடம்பெறுவதுடன், ஒரு பிரிவில் 7 அணிகள் எனப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor