த.வி.கூ. உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்

mukunthan-vijitharan-tnaபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் இன்று திங்கட்கிழமை யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான தங்க முகுந்தன், செல்வன் கந்தையா, செல்லையா விஜிதரன் ஆகியோரே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பானது வேட்பாளர்களை சாதி அடிப்படையில் தெரிவு செய்கின்றதென்றும் தமிழர் விடுதலை கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியேமே மேற்படி மூவரும் இவ் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.