த.தே.கூட்டமைப்புடன் கூட்டணி – பொன்சேகா

Sarath-ponsekaவடமாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தாம் தயராக இருப்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து அரசியல் நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இலங்கையின் அரசியல் விடயத்தில் தாமும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடமாகாண சபைத் தேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடுகின்ற அதேநேரம், ஆட்சி அமைக்கும் பொருட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்