Ad Widget

தோல்­விக்கு இலங்கை கிரிக்கட் நிர்­வா­கமே காரணம் !அர்­ஜுன ரண­துங்க

நியூஸி­லாந்­துக்கு எதி­ரான கிரிக்கட் போட்­டி­களில் இலங்கை அணியின் தோல்­விக்கு இலங்கை கிரிக்கட் நிர்­வா­கமே காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க, கடந்த ஐந்து வரு­ட­கா­ல­மாக நாம் ஒரு திற­மை­யான அணியை உரு­வாக்­கவில்­லை­யெ­னவும் குற்றம் சாட்­டினார்..

நியூஸி­லாந்­துக்கு சென்­றுள்ள இலங்கை கிரிக்கட் அணி அங்கு விளை­யா­டிய போட்­டிகளில் தோல்வி கண்­டமை தொடர்­பாக கருத்து வெளியிட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் இது தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக எமது அணியை கட்­டி­யெ­ழுப்­பாது ஒரு­சில வீரர்­களை மட்­டுமே தயார்­ப­டுத்­தினோம். எமது கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் சிறந்த வீரர்.

நியூஸி­லாந்­துக்கு புதிய வீரர்­களை கொண்டு சென்று கடலில் தள்­ளி­வி­டு­வதை விடவும் திற­மை­யான வீரர்­களை அழைத்து சென்­றி­ருக்­க­வேண்டும். தற்­போ­தைய நிலையில் புதிய வீரர்கள் கொண்டு செல்­லப்­பட்­டமை பெரும் குறை­பா­டாகும்.

இதேவேளை மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை, 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இந்த தொடரின் முதலாவது வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.

நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி இடம்பெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணி சார்பாக கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட பெறாத நிலையில் வௌியேற 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 276 ஓட்டங்களை விளாசியது.

இதனையடுத்து 277 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை சார்பாக, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணதிலக்க (65 ஓட்டங்கள்) மற்றும் திலஹரத்ன டில்ஷான் (91 ஓட்டங்கள்) ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வௌிப்படுத்தினர்.

மேலும் அடுத்ததாக களமிறங்கிய லகிரு திரிமானேவும் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களை களங்கடிக்கும் விதமாக சிறப்பாக ஆடினார்.

இதன்படி 46.2 ஓவர்களிலேயே 277 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கிய இலங்கை 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திரிமானே 87 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இதன்படி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என நியூஸிலாந்து முன்னிலையில் உள்ளது.

Related Posts