தொழில்நுட்ப சார்பு அதிகரிப்பு!

உலகில் பத்தில் ஆறு பேர் கணினி போன்ற மின்னணுத் திரைகளைப் பார்ப்பதில் தங்களின் பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டு வருவதாக புதிய உலகளாவிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

facebook

இப்படிக் கணினித் திரைகளைப் பார்ப்பதிலேயே காலங்கழிக்கும் இவர்கள் உண்மையில் தங்களுக்கு மேலும் சற்று எளிமையான , மெதுவாகச் செல்லும் வாழ்க்கையை வாழவே விரும்புகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இப்ஸோஸ் மோரி என்ற இந்த சந்தை ஆய்வு நிறுவனம், தொழில் நுட்பம் மக்களின் வாழ்க்கையில் செலுத்தும் அதிகரித்து வரும் தாக்கம் குறித்துக் கண்டறிய, உலகின் 20 நாடுகளில் சுமார் 16,000க்கும் மேலான வயது வந்தவர்கள் மத்தியில் இந்த ஆய்வை நடத்தியது.

தொழில்நுட்பம் தங்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்து வெளிப்படையாகவே விரக்தியடைந்திருந்தாலும், பெரும்பாலான மக்கள் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

அந்தரங்க உரிமை, பாரம்பர்யம், உலகமயமாதல் போன்றவை பற்றியும் இந்த ஆய்வு கவனம் செலுத்தியது.

உலகம் வெகு வேகமாக மாறிவருவதாக ஆய்வுகாணப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் கூறினர்.