தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

adikkal-varani“மகிந்தோதைய”த் திட்டத்தின் கீழ் யாழ். வரணி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

காலை 10.00 மணிக்கு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

11.2 மில்லியன் ரூபா செலவில் இந்த தொழில்நுட்பக் கூடம் அமைக்கப்படவுள்ளது.

இங்கு உரையாற்றி வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி, ‘மாணவர்களின் தொழில் நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வடமாகாணத்தில் உள்ள 34 பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்தார்.