Ad Widget

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி

வடமராட்சி, பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் நிதியுதவியில் இவ்வருடம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அபிவிருத்தி பணிகள் மேற்கொள்வது குறித்து சாத்திய வள ஆய்வுகள் மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை (04) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், நீரியல் வள அமைச்சின் அதிகாரிகள், அதன் கீழ் இயங்கும் துறைமுக மற்றும் படகு நிறுத்துமிட அபிவிருத்தித்திட்ட உத்தியோகத்தர்கள், கடற்றொழில் கூட்டுறவுச்சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

7 ஹெக்டயர் பரப்பளவு கொண்ட பகுதியில் இந்த துறைமுகமானது அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. நாட்கலங்கள் 300 தரித்து நிற்கக்கூடியதாகவும் குளிரூட்டப்பட்ட அறை, மீன் ஏல விற்பனை நிலையம் எரிபொருள் நிரப்பு நிலையம், மீன் களஞ்சியப்படுத்தும் அறை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் இத்துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

Related Posts