Ad Widget

தொடரும் அபாய எச்சரிக்கை !! : மீள் குடியேறுவதில் மக்கள் அச்சம்!!

வலிவடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதிகளில் வெடிப்பொருட்கள் இருப்பதற்கான அபாய எச்சரிக்கை காணப்படுவதால் மக்கள் குடியேறுவதில் அச்சம் வெளியிடுகின்றனர்.

bankar-army-palaly

அத்துடன் இராணுவத்தினர் அமைத்திருந்த பதுங்கு குழிகள் மற்றும் மண் மூட்டைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பு அரண்கள் போன்றனவும் அகற்றப்படாமல் இருப்பதால் அவற்றிலும் வெடி பொருட்களின் அபாயம் இருக்கலாம் என கருதி மக்கள் மீள் குடியேறுவதில் பின்னடைவை காட்டுகின்றனர்.

இதேவேளை மக்களை மீள்குடியேற விடாமல் தடுப்பதற்காகவே இராணுவத்தினர் இவ்வாறான பதுங்கு குழிகள் மற்றும் அபாய எச்சரிக்கை அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளதாகவும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன் போது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேறும் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராணுவத்தினரால் கடந்த காலங்களில் பலாலிப் பகுதியில் விடுவிக்கப்பட்ட 486 ஏக்கரில் பெரும்பகுதி விவசாய நிலங்களாகும். அத்துடன் இராணுவத்தினரிடம் இன்னும் 7000ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts