2014 தை முதல் பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
அடுத்தமாதம் முதல் கோதுமை மாவிற்கு வரி விதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
அதனால் ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில், பாணின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும், கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படின் அதனுடன் தொடர்புடைய துறையினர் பெரிதும் பாதிக்கப்படலாம் என்பதால் அரசாங்கம் அதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் சுமார் 5 இலட்சம் பேர் பேக்கரி உற்பத்தித் துறையை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளனர்.