தேர்தலுக்கு பின் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை பயன்படுத்த கூடாது!- அரசு எச்சரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்த போது நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் பயணத்தை அந்த கட்சி மேற்கொண்டு வருவது தெரிவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை தேர்தலுக்கு பின்னர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை பயன்படுத்தினால் அதற்கு எதிரான பொருந்தமான மருந்துகள் அரசாங்கத்திடம் இருக்கின்றது.அவர்கள் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நாட்டை பிளவுப்படுத்த பயன்படுத்த மாட்டார்கள் என்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.

அதேவேளை மலையகத்தில் எந்த அரசியல் கட்சியும் சுயாட்சியை கோரவில்லை. அவர்கள் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது சிறந்த செயற்பாடாகும்.அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது இனவாத கூட்டணியல்ல.தொண்டமான் மற்றும் திகாம்பரம் ஆகிய இரண்டு பேரும் வெவ்வேறு வாக்கு வங்கிகளை கொண்டிருந்தாலும் அவர்கள் அரசுடன் இணைந்திருப்பது பலத்தை கொடுத்துள்ளது.மலையக மக்கள் அரசுடன் கைகோர்த்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மலையக வாக்கு வங்கி வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.