தேசிய கொடியினை காலால் மிதித்த நால்வர் கைது

Fluttering Sri Lankan flagயாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தி பகுதியில் தேசிய கொடியினை காலால் மிதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே நேற்று மாலை தேசிய கொடியினை காலால் மிதித்தவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பொலிஸ் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.