தேசிய கல்வியற் கல்லூரி படிப்பை முடித்த ஆசிரிய மாணவர்களின் விவரம் கோரல்!

2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் படிப்புகளை முடித்த ஆசிரிய மாணவர்களுக்கு பொருத்தமான ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்காக இணையத்தின் ஊடாக தகவல்களைப் பெறும் திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

அதன்படி, கல்வி அமைச்சுக்கு தகவல்களை வழங்குவதற்கான இறுதித் திகதி வரும் டிசெம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

https://ncoe.moe.gov.lk/ என்ற இணையதளத்தின் மூலம் பயிற்சியாளர்கள் தங்கள் தகவல்களை உள்ளிடலாம் என்று கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.