துவாரகேஸ்வரனுக்கு அச்சுறுத்தல்

thuvareswara-makesswaran-UNPஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளாராக வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் தியாகராஜா துவாரகேஸ்வரன் முறைப்பாடு செய்துள்ளார்.

தியாகராஜா துவாரகேஸ்வரனின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்புகொண்ட இனந்தெரியாத நபர்கள் தகாத வார்த்தைகளினால் பேசி உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் காலங்களிலும் தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு இவ்வாறு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இது இரண்டாவது அச்சுறுத்தல் சம்பவம். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, நீதிபதியின் உத்தரவிற்கமைய விசாரணை மேற்கொள்ளப்படும் என யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.