Ad Widget

துண்டுவிழும் தொகை 74 ஆயிரம் கோடி ரூபா

2016ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 74 ஆயிரம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின்படி 2016 ஆம் ஆண்டுக்கான வருமானம் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 700 கோடி ரூபா, செலவீனம் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 700 கோடி ரூபாவாகும். இதன்படி துண்டுவிழும் தொகை 74 ஆயிரம் கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது துண்டுவிழும் தொகை 6 ஆயிரத்து 500 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது.

எனினும் 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் வருமானத்துக்கான பற்றாக்குறை 2016 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. 2015இல் அது ஆயிரத்து 800 கோடி ரூபாவாக இருக்க 2016 இல் அது ஆயிரத்து 400 கோடி ரூபாவாக உள்ளது.

Related Posts