தீபம் ஏற்றத் தடையில்லையாம்; டக்ளஸ்

இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இறந்த உறவுகளுக்காக தமது வீடுகளில், வியாபார நிலையங்களில் தீபம் ஏற்றலாம் அதனை யாரும் தடுக்க முடியாது அவ்வாறு தடுத்தால் தன்னிடம் கூறுமாறு கோரிக்கை விடுத்ததுடன்.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து நிரந்தர சமாதானம் நிலவுகின்றது இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர். தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக சிலர் கூறுகின்றனர் ஆனால் அதில் உண்மையில்லை.

யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவும் போது சிலர் திட்டமிட்ட செயற்கை யுத்தம் ஒன்றை ஏற்ப்படுத்த முனைகின்றனர் இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தால் இனப்பிரச்சனைக்கான தீர்வினை நிச்சயமாக வழங்க முடியும் ஆனால் இந்த அரசாங்கம் தவிர்ந்த வேறு ஒரு அரசாங்கத்தால் இனப்பிரச்சனைக்கான தீர்வுத்திட்டத்தை வழங்க முடியாது என அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor