திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா

ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பேரவையிலுள்ள தன் பதவியை இன்று (22) இராஜினாமா செய்துள்ளார்.

thissa-aththanayakka

இவர் தனது இராஜினாமா கடித்தை தலைமைத்துவ சபையின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கருஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இவர், நீண்ட காலமாக கட்சியின் பொது செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருந்தார்.

தமது அரசியல் வாழ்வில், தொன்று தொட்டு ஐக்கிய தேசிய கட்சியோடு இருந்த பேரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை, இவருடைய இராஜினாமா குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள கபீர் ஹாஷிம் மற்றும் ருவான் விஜேவர்தனவை தவிர மற்றைய அனைவரும் வேறு கட்சிகளில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தவர்களாவர்.

இதேவேளை இவருடைய இராஜினாமா கடிதத்தை இவ்விருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.