தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
மானிப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு போட்டியின் போதே தேசியக்கொடி இவ்வாறு தலைகீழாக ஏற்றப்பட்டது.
தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிப்பதை அறிந்த பொலிஸார் உடனடியா அதனை இறக்கி முறையாக ஏற்றி மரியாதை செலுத்தினர்.
யாழ் நவாலிப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பொலிஸாரின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டிகள் தேசியக்கொடியும் பொலிஸ் கொடியும் ஏற்றபட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன இதன் போதே தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது.