Ad Widget

தற்கொலை குண்டுதாரிகளாகும் தாய்மார்கள்!

இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் சோதனை நட­வ­டிக்­கை­க­ளுக்­காகப் பாது­காப்பு படை­யினர் கொழும்பில் உள்ள வீடொன்­றுக்கு சென்­றி­ருந்­த­வேளை அந்தச் சம்­பவம் இடம்­பெற்­றது.

அவ்­வேளை கதவை திறந்­தவர் பாத்­திமா இப்­ராஹிம். தற்­கொலை குண்­டு­தா­ரி­களில் ஒரு­வ­ரான இலாம் இப்­ரா­ஹிமின் மனைவி- கர்ப்­பிணி.

பொலி­ஸாரைப் பார்த்­ததும் அவர் வீட்­டிற்குள் ஓடி­வெ­டி­குண்டை வெடிக்க செய்தார்.அவ­ருடன் சேர்ந்த அவ­ரது மூன்று மகன்­களும் கொல்­லப்­பட்­டனர்.

இதே­போன்­ற­தொரு சம்­பவம் மார்ச் மாதம் இந்­தோ­னே­சி­யாவில் இடம்­பெற்­ற­து-­ ப­யங்­க­ர­வாத தடுப்பு பிரி­வினர், ஐ.எஸ் அமைப்பின் ஆத­ர­வா­ள­ரான அபு ஹம்­சாவை கைது­செய்­தி­ருந்­தனர். இவர் குண்­டு­ த­யா­ரிப்­பதில் திற­மை­யா­னவர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவ­ரது மனைவி சொலி­மாவை கைது­செய்­வ­தற்­காக அவ­ரது வீட்­டிற்குச் சென்­ற­வேளை சொலிமா தன்னை வெடிக்­க­வைத்து இறந்தார். இதன் போது அவ­ரது இரண்­டு­வ­யது குழந்­தையும் இறக்­க­வேண்­டிய பரி­தாபம் நிகழ்ந்­தது.

இலங்கை முதல் இந்­தோ­னே­சியா வரை ஆபத்­தான போக்­கொன்று ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. ஐ.எஸ் கொள்­கை­யினால் தங்­களை தீவி­ர­வா­த­ம­யப்­ப­டுத்­திக்கொண்ட பெண்கள் தற்­கொ­லைக்­ குண்­டு­தா­ரி­க­ளாக மாறு­கின்­றனர்.இதன் போது தங்கள் பிள்­ளை­க­ளையும் தங்­க­ளுடன் இணைத்துக் கொண்டு அவர்கள் மர­ணிக்­கின்­றனர்.

ஜிகாத் வர­லாற்றில் பெண் தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் பலர் காணப்­ப­டு­கின்­றனர். ரஷ்யா மேற்­கொண்ட போராட்­டத்தில் கருப்பு வித­வைகள் என்ற பிரி­வினர் தற்­கொலை தாக்­கு­தல்­களில் ஈடு­பட்­டனர்.

ஆனால் தங்கள் பிள்­ளை­க­ளுடன் தாய்­மார்கள் தங்­களை வெடிக்­க­வைக்கும் போக்­கொன்று புதி­தாக பயங்­க­ர­வா­திகள் மத்­தியில் உரு­வா­கி­யுள்­ளது.

அல்கொய்தாவில் இவ்­வா­றான போக்கு இல்லை என தெரி­விக்­கின்­றார். தென்­கி­ழக்­கா­சி­யாவைச் சேர்ந்த முன்னாள் அல்கொய்தா உறுப்­பினர் சோபியான் சவுரி.

இஸ்­லாமை பொறுத்­த­வரை வீட்­டையும் பிள்­ளை­க­ளையும் பார்த்­துக்­கொள்­வதே பெண்­க­ளுக்கான கடமை என்­கிறார் அவர்.

எனினும் தற்­கொலை தாக்­கு­தல்­களில் ஈடு­படும் பெண்கள் வேக­மாக சொர்க்­கத்­திற்குச் செல்ல விரும்­பு­கின்­றனர் என்­கிறார் அல்கொய்தா ஜெமா இஸ்­லா­மிய அமைப்பின் நசீர் அபாஸ்.

இஸ்­லா­மிய பெண்கள் மத்­தியில் இவ்­வா­றான புதிய போக்கு காணப்­ப­டு­வதை 2018 மே மாதம் இந்­தோே­னசி­யாவின் சுர­பயா நகரில் இடம்­பெற்ற தற்­கொலை குண்­டு­த்தாக்­கு­தல் கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

இந்த நகரில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மீது தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

தந்தை, தாய் மற்றும் 18 வயதுக்குட்­பட்ட நான்கு பிள்­ளைகள் இணைந்து மேற்­கொண்ட இந்த தாக்­குதல் இந்­தோ­னே­சி­யா­விலும் சர்­வ­தேச அள­விலும் பாரிய அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

செல்­வந்த வர்த்­த­க­ரான தந்தை, மனைவி மற்றும் இரு பெண்­பிள்­ளை­களின் உடல்­களில் வெடி குண்டை பொருத்­தினார். அவர்கள் அதனை கிறிஸ்­தவ தேவா­­ல­யங்­களில் வெடிக்­க­ வைத்­தனர்.

அதன் பின்னர் அவர் வெடி­குண்­டுகள் பொருத்­தப்­பட்ட மோட்­டார்­சைக்­கிளில் ஏற்றி தனது இரு மகன்­மாரை கிறிஸ்­தவ தேவா­ல­யத்­திற்கு அனுப்­பி­வைத்தார் அவர்கள் அங்கு தங்­களை வெடிக்­க­வைத்­தனர்.

அதன் பின்னர் தந்தை வெடி­பொ­ருட்கள் நிரம்­பிய காரை மற்­றொரு கிறிஸ்­தவ தேவா­ல­யத்தை நோக்கி செலுத்தி தன்னை வெடிக்­க­வைத்தார்.

குண்­டு­வெ­டிப்பு இடம்­பெ­று­வ­தற்கு முதல்­நா­ளி­ரவு தனது பிள்­ளை­க­ளிடம் மர­ணிக்க தயா­ரா­யி­ருங்கள் என தந்தை தெரிவித்­துள்ளார் என அறியத் தருகின்றார் ஆய்­வா­ள­ரான ரிஸ்கா நூருல்.

தம்­ப­திகள் தீவி­ர­வா­த­ம­யப்­ப­டுத்­தப்­படும் இந்த போக்கு அவர்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு ஆபத்­தான விட­ய­மாக மாறி வரு­கின்­றது.

பெற்­றோர்கள் தாங்கள் ஜிகாத்தில் ஈடு­ ப­ட­வேண்டும் என தீர்­மா­னித்தால் பிள்­ளைகள் ஆபத்­தான நிலைக்கு தள்­ளப்­ப­டு­கின்­றனர் எனத் தெரிவிக்­கின்றார் ஜெமா இஸ்­லா­மிய அமைப்பின் முன்னாள் தலைவர் நசீர்

பெற்­றோர்கள் தங்கள் பிள்­ளை­களை சொர்க்­கத்­திற்கு கொண்­டு­செல்­ல­வேண்டும் என கரு­து­கின்­றார்கள் எனவும் அவர் தெரிவித்­துள்ளார்.

ஆண்­களை விட பெண்­களால் அதிதீவி­ர­வாத போக்­குடன் விளங்க முடியும் என பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் குறித்து ஆராய்ச்­சி­களை மேற்­கொண்­ட­வர்கள் தெரிவிக்­கின்­றனர்.

பெண்கள் தங்கள் மனதை தம் மனதை உறுதி­ப­டுத்­து­வதால் அவர்கள் தியா­கத்­திற்கு அதி­க­ளவு தயா­ரா­க இ­ருப்­பார்கள். அதனால் அவர்கள் ஆபத்­தா­ன­வர்கள் என தெரிவிக்­கின்றார் ஆய்­வா­ள­ரான ரிஸ்கா நூருல்.

இந்­தோ­னே­சி­யாவில் பொலிஸார் தேடுதல் நடத்­தி­ய­வேளை, தன்னை வெடிக்­க­வைத்த சொலிமா தன்னை விட அதி­க­ளவு தீவி­ர­வா­த­போக்கை கொண்­டவர் என அவ­ரது கணவர் அபு ஹம்சா விசா­ர­ணையின் போது தெரிவித்­துள்ளார்.

இந்­தோ­னே­சிய தம்­ப­தி­யினர் இணை­ய­ மூ­லமே தீவி­ர­வா­த­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். தற்­கொலை குண்­டு­த்தாக்­கு­தலை மேற்­கொண்ட பெண்­களில் பலர் தங்கள் கண­வர்­களின் போத­னை­களால் ஈர்க்­கப்­பட்­டுள்­ளனர். இதனை அவர்­க­ளுக்கு அடி­ப­ணி­வ­தாக அவர்கள் கரு­தி­யுள்­ளனர்.

இலங்­கையின் பெண் தற்­கொலை குண்­டு­தாரி பயங்­க­ர­வாத சூழலில் வாழ்ந்­தவர் என்­பதால் அவரைப் பற்றி எந்தவித அதிர்ச்­சியும் எனக்கு ஏற்­ப­ட­வில்லை எனத் தெரிவிக்­கின்றார் இந்­தோ­னே­சி­யாவின் சமூக உள­வியல் நிபுணர் ஒருவர். பயங்­க­ர­வா­தி­களின் மனை­விமார் குறித்த எனது ஆராய்ச்­சியின் போது பலர் தங்கள் கண­வர்களுக்குக் கீழ்­ப­ணிவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளமை தெரிய­வந்­தது.

சிறிய எண்­ணிக்­கை­யி­லான பெண்­களால் மாத்­தி­ரமே தங்கள் கணவர்­களின் தீவி­ர­வாத போக்கை நிரா­க­ரிக்க முடிந்­தது ஆனால் அவ்­வாறு நிராகரித்தால் அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அவர்கள் கணவர்களிடமிருந்து பிரிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்­தோ­னே­சி­யாவில் தீவி­ர­வா­த­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட பெண்கள் சிலர் தங்கள் கணவர்­க­ளி­ட­மி­ருந்து சீத­ன­மாக தற்­கொலை அங்­கி­களை கேட்­கின்­றனர் என அதிர்ச்சி தக­வலும் வெளியா­கி­யுள்­ளது. இவர்கள் திரு­ம­ணத்­திற்குப் பின்னர் தற்­கொலை குண்­டு­த்தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ளனர். இவர்­களில் பலர் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கடந்த மார்ச்­மாதம் இந்­தோ­னே­சி­யாவின் பல பகு­தி­களில் இவ்­வா­றான பெண்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

Related Posts