தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையில் யாழ்.றோட்டறிக் கழகம்

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.றோட்டறிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள சைக்கிளோட்டம், வீதி விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.

இதன்படி இந் நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி பொதுச் சந்தையிலும், யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையம் முன்பாக நாளையும், முல்லைத்தீவு பேருந்து நிலையம் முன்பாக நாளை மறுதினமும் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதுடன் பிரசார நடவடிக்கைகளில் பங்கேற்று தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.