வலி. வடக்கு மக்களின் வீடழிபபை எதிர்த்தும் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நாளை வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண சபை வேட்பாளர் தம்பிப்பிள்ளை தம்பிராசா இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடமபெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றமையினை எதிர்க்கும் விதமாக யாழ். நகரில் உள்ள முனியப்பர் ஆலயத்தின் முன்பாக உண்ணாவிரத பேராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு தருமாறும் அவர் கேட்டுள்ளார்.
அத்துடன், வலி. வடக்கு மக்களின் வீடுகளை இடித்தழிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், அப்பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.