Ad Widget

தமிழ் மக்கள் பேரவையில் கலந்துகொண்ட மூவரிடம் விளக்கம் கேட்போம்: சிவில் சமூகம்

அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் தாங்கள் உரிய முறையில் உள்வாங்கப்படவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

east_civil_society

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொண்ட தமது உறுப்பினர்கள் மூன்று பேரும் நிர்வாகத்தின் அனுமதி இன்றியே அந்த கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் பொதுச் செயலாளரான த.வசந்தராஜா உட்பட ஒரு சில உறுப்பினர்கள் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். இதில் வசந்தராஜா தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர்களில் ஒருவராகவும் தெரிவாகியுள்ளார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு ஆயர் பொன்னையா யோசப் தலைமையில் கூடி ஆராய்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் இந்த மூன்று உறுப்பினர்களிடம் விளக்கம் கோர முடிவு செய்துள்ளது.

அதேசமயம் தமது இந்த முடிவு தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரான முடிவு அல்ல என்று தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர் எஸ். மாமாங்கராஜா.

மட்டக்களப்பு நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு உரிய முறையில் அழைக்கப்பட்டு உள் வாங்கப்படவில்லை என்றும் இது ஒர் பாரிய இடைவெளியையும் வித்தியாசத்தையும் காட்டுவதாகவும் விரும்பத்தகாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேசமயம் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக பிரதிநிதியதாக தான் கலந்து கொள்ளவில்லை என அந்த அமைப்பின் செயலாளரான வசந்தராஜா தெரிவிதார்.

தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் தான் கலந்து கொள்வது பற்றி சிவில் சமூக அமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

தாங்கள் யாழ்பாணத்தில் தங்கியிருந்த வேளையில் தங்கள் பக்கக் கருத்துக்கள் பெறாமலே தங்களிடம் விளக்கம் கோருவது என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts