தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் -பில் பென்னியன்

Ukமத்திய மற்றும் மாகாண அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என ஜரோப்ப நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளருடன் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, மத்திய மற்றும் மாகாண அதிகாரங்களின் ஊடாக தமிழ் மக்களுக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக பில் பென்னியன் மாவட்ட செயலாளரிடம் வினவியுள்ளார். அதன்போது, தற்போதைய நிலவரங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக விளக்க படங்களுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளன, யாழ்ப்பாண மாவட்டம் 15 பிரதேச செயலகங்களிலும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்களும், வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் – யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபருடன் சந்திப்பு