தமிழில் வணக்கம் என்று எழுதாமல் ”ஆயுபோவன்” வந்தது ஏன்? ஊடகவியலாளர் கேள்வி!

பொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் “வணக்கம்” என்ற பதத்தை நீக்கிவிட்டு “ஆயுபோவன்” என்ற சிங்களப் பதத்தை தமிழில் எழுதப்பட்டது ஏன்? என்று வெளிநாட்டு தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அந்தக் குழுவில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.

இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்த பின்னர் அநுர பிரியதர்ஷன யாப்பா அந்த ஊடகவியலாளரைப் பார்த்து “நீங்கள் வேண்டுமென்றே இந்தக் கேள்வியை எழுப்புகின்றீர்கள்” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் தமிழ் மக்களின் மொழி உரிமை மறுக்கப்படுவதற்கு உதாரணமாக பொதுநலவாய மாநாட்டில் தமிழில் வணக்கம் என்று எழுதப்படுவதற்குப் பதிலாக ஆயுபோவன் என்று எழுதப்பட்டிருந்தது என்று கருதிய வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அரசாங்கம் இதற்கு பதில் அளிக்கத் தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

ayupuwan