‘தமிழரின் நம்பிக்கைக்கு உரிய தலைவன்’ என வடக்கு முதல்வரை விழித்த மக்கள்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியில் கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, ‘தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவன்’, ‘தமிழரின் தலைவன்’ என விழித்துக் கோசமிட்டனர்.

eluga-tamil-5

யாழ். பல்கலைக்கழகம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து இரு பிரிவுகளாக ஆரம்பமான பேரணியினை வடக்கு மாகாண முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

பின்பு முற்றவெளியில் முடிவுற்ற பேரணியினைத் தொடர்ந்து அங்கு உரையாற்றுவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மேடை ஏறிய வேளையிலேயே மக்கள் இவ்வாறு கோசமிட்டு தமது ஆரவாரத்தினை வெளிப்படுத்தினர்.

முதலமைச்சர் தனது உரை நடுவே தெரிவித்த தமிழினம் தொடர்பான கருத்துக்களுக்கும் மக்கள் கைதட்டி முதலமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு உற்சாகப்பட்டனர். ‘தமிழினத்தின் தலைவன்’ தமிழனுக்கு சரியான தலைவன் என முதலமைச்சரை மக்கள் விழித்து கரசோசம் இட்டு முதலமைச்சர் மீதான தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

Recommended For You

About the Author: Editor