வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்துவோம் -சிவாஜி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தர்.

sivaji-mulli-1

mulli-sivji-2

mulli-sivji-3

வடமாகாணசபை முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவுகூர்ந்ததினை அடுத்து, அங்கு நின்ற ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘இதே நாளில் தான் பல்லாயிரக்கணக்கான எம் உறவுகள் கொன்றொழிக்கப்பட்டது. இத்தினத்தில் நாம் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இன்று இங்கு இம்மக்களை நினைவு கூர்ந்து ஏற்றப்பட்ட சுடர் தட்டி வீழ்த்தப்பட்டு சப்பாத்துக் கால்களால் மிதிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள நாட்கள் மட்டும் அல்ல இந்த மாதம் பூராகவும் இத்தினத்தை அனுஷ்டிப்போம். அத்துடன், இடம்பெறவிருக்கும் வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்துவோம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

வடமாகாண சபையில் பதற்றம்

வடமாகாண சபையில் நினைவேந்தல்! அனைவரையும் அணி திரளுமாறும் அழைப்பு

Related Posts