கிளிநொச்சி, பளை தர்மகேணி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை கடக்கமுயன்ற அதேயிடத்தை சேர்ந்த குருபரன் தவசீலன் (வயது 32) என்பவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்று பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதியதில், இவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.