தபால் மூலம் வாக்களிக்க ஒகஸ்ட் 2ம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்

elections-secretariatஎதிர்வரும் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காக தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஒகஸ்ட் 2ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிபர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.