தனியார் தொலைத்தொடர்பு கோபுர வளாகத்தில் தீ விபத்து

யாழ். சட்டநாதர் கோயிலுக்கு அருகிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு கோபுர வளாகத்திலுள்ள மின்னிணைப்பில் இன்று வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்னொழுக்கு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டதாக யாழ். மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இத்தீவிபத்து தொடர்பில் யாழ். மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.