Ad Widget

தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றில்

தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை 2500 ரூபாவினால் அதிகரித்தல் மற்றும் அவர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 10,000 ரூபாவாக உயர்த்துதல் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் இம்மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன தெரிவித்தார்.

இம்மாதத்திற்கு அந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.

புதிய வருட ஆரம்ப நாளான நேற்று தொழில் துறை அமைச்சின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Posts