தண்ணீர் தாங்கிகள் (bowser) கையளிப்பு

bowser-wotterதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கும் நெடுந்தீவு பிரதேச சபைக்கும் தண்ணீர் தாங்கிகள் (bowser) இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் சுமார் 3.8 மில்லியன் ரூபா பெறுமதியான 2 தண்ணீர் தாங்கிகளே (bowser) இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.