Ad Widget

தடைகளையும் மீறி பல இடங்களில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவஞ்சலிகள்

யாழ்.குடாநாட்டில் படையினரின் அதி உச்சக்கட்ட பாதுகாப்பிற்குள் கட்சி அலுவலகங்கள் கோவில்கள் தேவாலயங்கள் கடந் த 3தினங்களாக வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் பகுதில் இறுதி யுத்தத்தில் இறந்த  மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள் நடத்துவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியன அறிவிப்புக்களை விடுத்திருந்த நிலையில் மேற்படி கட்சிகளின் அலுவலகங்கள் முழுமையான படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் நேற்றய தினம் நள்ளிரவு தொடக்கம் கொண்டுவரப்பட்டிருந்தன.

இன்றைய தினம் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்களும் கூட கட்சியின் அலுவலகங்களுக்குள் செல்ல முடியாத நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுட்டிக்கப்படப்போவதில்லை என்ற நிலைப்பாடு மாலையி ல் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை 6மணியளவில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன் னணியினர் இணைந்து குருநகர் பெரிய தேவாலயத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி கொல்லப்பட்ட மக்களுடைய ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளை மேற்கொண்டிருந்தனர்.

nallur

 

மேலும் நல்லூர் ஆலயத்திற்கும் சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்ட மக்களுடைய ஆத்மா சாந்திக்காக கற்பூரம் ஏற்றியதுடன் தேங்காய்களை அடித்து ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர்.

உயிர் நீத்த உறவுகளுக்கு மன்னாரில் விசேட அஞ்சலி

யுத்தத்தில் உயிர் நீத்த  அனைத்து உறவுகளுக்குமான விசேட அஞ்சலி நிகழ்வு இன்று பிற்பகல் மன்னாரில் அவர்களை அடக்கம் செய்த அதே இடத்தில் இடம்பெற்றது. மன்னார் பொது சேமக்காலை மற்றும் முத்தரிப்புத்துறை தேவாலயம் ஆகிய இடங்களில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் இடம்பெற்றது. 

 

இந்நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் திரு அந்தோணி மார்க், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அஞ்சலி செலுத்திய த.தே.ம.முன்ன​ணியினர்

இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இவ் அஞ்சலி நிகழ்வுகள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், முள்ளிவாய்க்காலில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இன்று காலை முதல் இராணுவத்தினரின் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது.

கட்சி உறுப்பினர்களோ, ஆதரவாளா்களோ, பொது மக்களோ கட்சி அலுவலகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதன் காரணமாக திட்டமிட்டபடி நினைவேந்தல் நிகழ்வை அங்கு நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும், உளவுத் துறையினரது கடுமையான கண்காணிப்பையும் தாண்டி கட்சியினால் பிரத்தியேகமான ஓர் இடத்தில் நினைவு வணக்க நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

tnpf_may_002

 

கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிதிர்க்கடன் நிறைவேற்றும் சமயச் சடங்கில் ஈ.சரவணபவனும், மாகாணசபை உறுப்பினர் கஜதீபனும்கலந்து கொண்டனர்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்காக கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிதிர்க்கடன் நிறைவேற்றும் சமயச் சடங்கில் மக்கள் கலந்து கொள்ளவும் படைத்தரப்பு தடைவிதித்தது. ஆயினும் படையினரின் தடையையும் மீறி கீரிமலைக்குச் சென்று குறித்த பிதிர்க்கடன் நிறைவேற்றும் சடங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும், மாகாணசபை உறுப்பினர் கஜதீபனும்கலந்து கொண்டனர் .

இது குறித்து மேலும் தெரியவருவதாவது-  இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கீரிமலை நகுலேஸ்வரத்தில் சிறப்பு யாகத்துக்கும், பிதிர்க்கடன் நிறைவேற்றும் சடங்குக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆயினும் தெல்லிப்பழை மற்றும் மாதகல் பகுதிகளில் காலை முதலே படையினர் குவிக்கப்பட்டனர். குறித்த பகுதியைத் தாண்டி எவரும் கீரிமலைக்கு செல்லக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இதனால் பிதிர்க்கடன் நிறைவேற்றச் சென்ற ஏராளமானோர் படையினரின்கெடுபிடியால் திரும்பிச் செல்லவேண்டியிருந்தது. இந்த நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் , மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் மக்களை கீரிமலைக்குச் செல்ல அனுமதிக்குமாறு படையினருடன் வாதடினர்.

ஆயினும் எவரையும் உள்ளே அனுமதிக்கமுடியாது என்று படையினர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். பின்னர் நீண்டநேர தர்க்கத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனையும், மாகாணசபை உறுப்பினர்  கஜதீபனையும் கீரிமலைக்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதித்தனர். அதன் பின்னர் அங்கு நடைபெற்ற பிதிர்க்கடன் செலுத்தும் சமயச்சடங்கிலும் அன்னதான நிகழ்விலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும், மாகாணசபை உறுப்பினர் கஜதீபனும் கலந்துகொண்டனர். இவர்களிடம்  “ யாருமே இந்தப் பிதிர்க்கடன் செலுத்தும் சடங்கில் கலந்து கொள்ள இராணுவம் அனுமதிக்காது என்றுதான் நினைத்தேன். ஆயினும் நீங்கள் அந்த தடையைத் தாண்டி இங்கு வந்து சமயச்சடங்கில் கலந்துகொண்டமையால் பிதிர்களின் ஆன்மா சாந்தியடையும்” என்று ஆலயப்பிரதம குரு  தெரிவித்தார்.

keerimalai_002

llllahjkc

 

படங்கள் : ஒன்லைன் உதயன்

 

Related Posts