Ad Widget

தங்க நகை அணியாத பெண் மீது தாக்குதல்!

தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுழிபுரம் பகுதியிலேயே நேற்று(19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ”தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை கொள்ளையர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீதியில் யாரும் அற்றவேளை குறித்த பெண்ணை வழிமறித்த கொள்ளையர்கள் அவர் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்காததால் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts