ஜூலையில் க.பொ.த உயர்தர பாடத்திட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி ஆரம்பம்

gov_logபுதிய க.பொ.த உயர்தர பாடத்திட்டத்துக்கு அமைய அறிமுகமாகும் தொழில்நுட்பப் பிரிவு நாடெங்கிலும் உள்ள 200 பாடசாலைகளில் இவ்வருடம் ஜூலையில் தொடங்கும் என கல்வி அமைச்சு கூறியது.

தகவல்நுட்பம், இலத்திரனியல், சிவில் மற்றும் இயந்திர பொறியியல், உணவு விஞ்ஞானம், விவசாயம் என்பன இந்த புதிய பிரிவுக்கான பாடங்களாகும். மாணவர்கள் இவற்றிலிருந்து இரண்டு பாடங்களையும் முன்னர் பாடத்தை வேறு பிரிவு பாடங்களிலிருந்தும் தெரிவு செய்ய முடியும்.

தொழில்நுட்ப பிரிவு ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் குறைந்த பட்சம் ஒரு பாடசாலையிலாவது அறிமுகம் செய்யப்படும். இதற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. ஆசிரியர்களுக்கான பயிர்களையும் வழங்கி வருகின்றோம் என அமைச்சு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor