ஜனாதிபதி ஆயர்களை சந்திக்கிறார்

mahinthaயாழ்ப்பாணம் ,மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆயர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து ஆயர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி விரும்புவதாகவும் அதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி செயலக தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதியின் இந்த அழைப்பு தொடர்பாக கருத்து வெளியிட மறுத்த யாழ் ஆயர் இல்ல வட்டாரங்கள் ஜெனீவா மனித உரிமை சபையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக இடம்பெறும் சந்திப்புக்களில் ஆயர்கள் கலந்துகொள்வது சாத்தியமில்லை என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் வடக்கு கிழக்கில் சமூக பிரமுகர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.