சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ். மாணவிகள் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ்ப்பாண மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

cycle-race-sisters

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப்போட்டி கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெற்றது. 24 கிலோமீற்றர் கொண்ட இந்த போட்டியில் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் சகோதரிகளான மாணவிகள் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.

கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவி விதுசனா வெள்ளிப் பதக்கத்தினையும், யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor