செஞ்சோலை மாணவிகளின் யாழ். சுற்றுலா

senchcholaiதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்த கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் மேற்பார்வையின் கீழ் உள்ள செஞ்சோலை மற்றும் பாரதி இல்ல மாணவிகள், சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான சுற்றுலாவினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது யாழில் பிரசித்தி பெற்ற ஆலயங்களான நல்லூர் கந்தன், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கும் மற்றும் யாழ். பொது நூலகம், யாழ். பல்கலைக்கழகம், யாழ். ஒல்லாந்தர் கோட்டை, பண்ணைக் கடற்கரை ஆகியவற்றையும் சிறுமிகள் சென்று பார்வையிட்டனர்.

இந்த சுற்றுலா தொடர்பில் மாணவிகள் கருத்து தெரிவிக்கையில்…

யாழில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் வருகை தந்தது ஒரு மகிழ்ச்சி நிறைந்த ஒரு பயணமாக இருந்துள்ளது. ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாணத்தைப் பற்றி நாங்கள் செவி வழியாக அறிந்திருக்கின்றோம்.

இந்த சுற்றுலா மூலம் எமக்கு இந்த வாய்ப்பு ஏற்பட்டது மகிழ்ச்சியான ஒன்று அதிலும் குறிப்பாக யாழ். பல்லைக்கழகம், பொது நூலகம், யாழ். கோட்டை என்பன எமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இடமாக அமைந்துள்ளன என்றும் இது எமக்கு ஒரு புதிய அனுபவத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த சிறுமிகள் தெரிவித்தனர்.

இந்த சுற்றுலாவில் 180இற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts