சுயதொழில் கொடுப்பனவுகள் வழங்கிவைப்பு

வட மாகாண சமூக சேவை திணைக்களத்தால், வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 21 பயனாளிகளுக்கு முதற்கட்ட சுயதொழில் கொடுப்பனவாக தலா 7500 ரூபாய் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ம.பிரதீபன் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.

m-piratheepan-kopay

நலிவுற்ற குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு கிராம அலுவலர் ரீதியில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள பணத்தினை கொண்டு பயனாளிகள் கோழிவளர்ப்பு, தையல், கைப்பணிப் பொருட்கள் தயாரித்தல் போன்ற ஏதாவதொரு சுயதொழில் முயற்சியை மேற்கொள்வார்கள்.

அவர்கள் மேற்கொள்ளும் சுயதொழில் முயற்சிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, அவை சிறந்த முறையில் இருக்கும் பட்சத்தில் மீண்டுமொரு தடவை தலா 7500 ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என செயலாளர் மேலும் கூறினார்.