முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோரின் கொடும்பாவிகள் நேற்று மாலை யாழ் வடமராட்சியில் வைத்து சில இளைஞர்களால் எரியூட்டப்பட்டுள்ளன.
இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த இருவரது உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன.
சுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமராட்சி முள்ளியில் வல்லிபுரக் கோவிலுக்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.