சுதந்திர கட்சியின் யாழ் அலுவலகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமனாதனின் அலுவலகத்திற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் பொதுமக்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உரிய அதிகாரிகள் ஊடாக பெற்றுக் கொடுப்பது வழமையாகும்.

வுழமை போன்று இந்த செயற்பாட்டில் ஈடுபடும்போதே பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அமைப்பாளர் அங்கஜனின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.இதன்போது, பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன் பிரச்சினைகளை கேட்றிந்துகொண்டார்.

angan4