சுதந்திர இலங்கையின் 69 ஆவது வரவுசெலவு திட்டம்

முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம்

முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

vaddu-hindu-students-mahintha

புதிய வாழ்வாதாரத் திட்டம்

யுத்தத்தின் பின்னர் இளைஞர், யுவதிகளுக்கும் பிள்ளைகளுக்கும் புதிய வாழ்வாதாரங்களும் வாய்ப்புக்களும் முன்வைக்கப்படும்.

இனத்தை மையப்படுத்திய யுத்தம் இல்லை

எமது இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, ஓர் இனத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.

அரசுடன் இணையவும்: கூட்டமைப்புக்கு அழைப்பு

அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு, நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

பாதுகாப்பு செலவீனங்கள் குறைப்பு

5.5 சதவீதமாக இருந்த பாதுகாப்பு செலவீனங்கள் 3 சதவீதமாகக் குறைத்து அதனை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தியுள்ளோம்.

புலிகளை ஒழித்து புதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தினேன்

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் புலிகளை ஒழித்து நாடளாவிய ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினேன்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை 2017 இல் நிறைவு

வடக்கு, ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல நெடுஞ்சாலைகளின் பணிகள் 2017ஆம் ஆண்டு நிறைவு பெறும்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை 2017 இல் நிறைவு

வடக்கு, ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல நெடுஞ்சாலைகளின் பணிகள் 2017ஆம் ஆண்டு நிறைவு பெறும்.

பல்கலை மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி

பல்கலைக்கழக மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகளை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

புலிகள் அழித்த 100,000 வீடுகளை கட்டிக்கொடுத்தோம்

நாடளாவிய ரீதியில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு கொண்டுவருகின்றன. புலிகள் அழித்த வீடுகளில் 100,000 வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுத்துள்ளோம்.

அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு100,000 மோட்டார் சைக்கிள்கள்

கிராம புறங்களில் கடமைபுரியும் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு 100,000 மோட்டார் சைக்கிள்கள் வழங்கியுள்ளோம்.

சா/த பெறுபேறு 62.4 வீதமாக அதிகரிப்பு

கிராம பாடசாலை மாணவர்கள், சாதாரணத்தர பரீட்சையின் பெறுபேறு 62.4 வீதமான அதிகரிப்பு. இம்முறை பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் இலங்கையில் நன்றாக சித்தியடைந்த 10 மாணவர்களில் 9 பேர் கிராமங்களை சேர்ந்தவர்கள்.

ஏற்றுமதி வருவாய் 11,500 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டவுள்ளது
இந்த வருடத்தில் ஏற்றுமதி வருவாய் 11,500 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டவுள்ளது.

தண்ணீர் கட்டணம் 10வீதமாக குறைப்பு

தண்ணீருக்கான கட்டணம் 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் 25 அலகுகளுக்கான தண்ணீர் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையில் வளர்ச்சி

1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையில் துரித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடன் வாங்குவது குறைக்கப்படும்

கடன் வாங்குவது குறைக்கப்படும் வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை 2017ஆம் ஆண்டு 3 வீதம் குறையும்

நீர் கடலுடன் கலக்க முன் அதில் பயனடைய வேண்டும்

நீர் கடலுடன் கலப்பதற்கு முன்னர் அதில் பிரயோசனம் பெற்றுக்கொள்வது முக்கியமானது.

ரயில்வே திணைக்களத்திடமிருந்து சிறந்த சேவையை எதிர்பார்ப்பதற்காக விஷேட சேவைத்திட்டம் ஏற்படுத்தப்படும்.

ரயில்வே ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நிதி

ரயில்வே ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான 2,000 மில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கப்படவுள்ளது.

அச்சுறுத்தல்விடும் யானை இல்லை

விவசாயத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எனக்கு தெரிந்த வகையில் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் விடும் யானை இல்லை என்றும் கூறினார்.

கசினோவுக்கு 100வீதம், மோட்டார் வாகன இறக்குமதிக்கு சிறப்பு வரி

கசினோவுக்கான வரி 100வீதம் அதிகரிக்கப்படுவதுடன் மோட்டார் வாகன இறக்குமதிக்கு சிறப்பு வரி திட்டம் அமுல்படுத்தப்படும்.

2020 ஆம் ஆண்டளவில் தனியாள் வருமானம் $7500!

2020 ஆம் ஆண்டளவில் இலங்கை நாட்டின் தனியாள் ஒருவரின் வருமானம் 7500 அமெரிக்க டொலர்களை விட அதிகரிக்ககூடுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வெற் வரி குறைப்பு, புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

வெற் வரியை 11 வீதமாக குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.மேலும் நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளின் வைத்தியப் பரிசோதனைகளுக்காக 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் ஜனவரி முதல் மகாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு 4000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்கள், ஆயுர்வேத வைத்தியர்களுக்கு விஷேட கொடுப்பனவு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாவும், ஆயுர்வேத வைத்தியர்களுக்கு 5000 ரூபாவும் விஷேட கொடுப்பனவு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
மேலும் சிறுநீரக பாதிப்புள்ள நோயாளர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கவுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கு 100,000 மாணவர்களுக்கு அனுமதி

2020ஆம் ஆண்டளவில் தேசிய பல்கலைக்கழகங்களுக்கு 100,000 வரையிலான மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

மீன்பிடி சமூகத்துக்கு விசேட திட்டங்கள்

மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த பெண்களினதும் பிள்ளைகளினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

ஆசிரிய உதவியாளர்களுக்கு மாதாந்தப்படி

ஆசிரிய உதவியாளர்களுக்கு 9,500 ரூபாய் மாதாந்தப்படி வழங்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு செல்லமுடியாத மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லமுடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கு 50,000 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொருவருக்கும் 3,000 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கப்படும்.

ஊடகவியலாளருக்கு கடன் விரிவாக்கம், சமூர்த்தி கொடுப்பனவுகள் அதிகரிப்பு

ஊடகவியலாளருக்கு கடன் திட்டம் விரிவாக்கப்படவுள்ளதுடன், சமூர்த்தி பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க யோசனை.

மொரட்டுவ பல்கலையில் விண்வெளிப் பொறியியல் பிரிவு

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் பிரிவு நிறுவப்படும்.

குழந்தைகள் பால்மா இறக்குமதி வரி நீக்கம்
குழந்தைகளுக்கான பால்மா இறக்குமதி மீதான வரி நீக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மட்ட ஆசிரியர் நியமனம்

பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக புதிய முறையிலான பாடசாலை மட்ட ஆசிரியர் நியமனத்திட்டம் முன்வைக்கப்படும்.

சுயதொழிலாளர்களுக்கு கடன் வசதி
சுயதொழிலாளர்கள் மற்றும் வீதியோர வியபாரிகளுக்கு கடன்வசதி வழங்கப்படும்

வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு ஓய்வூதியத்திட்டம்
வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வோருக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முதியோர் கொடுப்பனவு அதிகரிப்பு
முதியோர்களுக்கான கொடுப்பனவு 1,000 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அனைத்து நகரங்களுக்கும் அபிவிருத்தி
இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுப்பனவு
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 3000 ரூபாய் வழங்கப்படவுள்ளதுடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படும்

முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு ஓய்வூதியம், காப்புறுதித்திட்டம்
முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்புறுதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மின்சாரக்கட்டணம் 25%ஆல் குறைப்பு
ஹோட்டல் மற்றும் சிறு, நடுத்தர கைத்தொழில்களுக்கான மின்சாரக்கட்டணம் 25 சதவீதத்தால் குறைப்பு.

இராணுவம், பொலிஸ் சேவையில் பிள்ளைகளுள்ள பெற்றோருக்கு கொடுப்பனவு

இராணுவம் மற்றும் பொலிஸ் சேவையில் பிள்ளைகள் உள்ள பெற்றோருக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 1,000 ரூபாய் எதிர்வரும் 2015 இலிருந்து வழங்கப்படவுள்ளது.

வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிப்பு
அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2,200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.15,000
அரச ஊழியர்களுக்காக ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது

அக்ரஹார காப்புறுதி ரூ.500,000 ஆக அதிகரிப்பு
அக்ரஹார காப்புறுதிக் கொடுப்பனவு ரூ. 500,000.அதிகரித்துள்ளது.

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் ஊழியர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, அதற்கு மேல் சம்பளம் எடுப்பவர்களின் மாதாந்த சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு யோசனை கூறியுள்ளார்.

ஊ.சே.நி 14%ஆக அதிகரிப்பு
வேலை வழங்குவோரினால் வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி 14 சதவீதமாக அதிகரிப்பு…

உயர்மட்ட உத்தியோகஸ்தர்களின் விசேட கொடுப்பனவு அதிகரிப்பு
பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகஸ்தர்கள், வைத்தியர்கள் மற்றும் நீதிச்சேவை ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.

துண்டுவிழும் தொகை ரூ.512 பில்லியன்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 512 பில்லியன் ரூபாய் துண்டுவிழுந்துள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2210 பில்லியன் ரூபாவாகும்.