சீன உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். நூலக உசாத்துணைபிரிவு கையளிப்பு

Librarie-jaffna-chinaசீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். பொதுநூலகத்தின் உசாத்துணைப்பகுதியை யாழ். மாநகரசபையிடம், சீன தூதரக அதிகாரிகள் கையளித்துள்ளனர்.

யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் யாழ். பொதுநூலகத்தில் இன்று புதன்கிழமை இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

இந்த புனரமைப்பு பணிகளை சீன அரசாங்கத்தின் பொறியியல் பிரிவு நேரடியாக மேற்கொண்டிருந்தது. யாழ். பொதுநூலகத்தின் உசாத்துணை பகுதியை புனரமைப்பதற்காக 20 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர் கியூ ஸியூபிங், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் உசாத்துணைப்பகுதியை புனரமைத்து முடித்தமைக்கான ஆவணத்தையும் கையளித்தார்.

மேலும், யாழ். மாநகரசபையின் நினைவுச்சின்னத்தை சீன அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர் கியூ ஸியூபிங்கிற்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வழங்கினார்.

Recommended For You

About the Author: Editor