சிவாஜிலிங்கத்துக்கு நெஞ்சுவலி

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நெஞ்சுவலி காரணமாக வியாழக்கிழமை (06) மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

sivajilingam_tna_mp

வைத்திய சிகிச்சை பெறுவதற்காக அவர் வைத்தியசாலைக்குச் சென்றபோது, அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, அவருக்கு தகுந்த சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.